சுடச்சுட

  

  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவு: திருமுருகன் காந்தி

  By DIN  |   Published on : 08th October 2017 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றஞ்சாட்டினார்.
  புதுச்சேரியில் மே 17 இயக்கம் சார்பில், தமிழன உரிமை மீட்புப் பொதுக் கூட்டம் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் சுதேசி ஆலை எதிரே சனிக்கிழமை நடைபெற்றது.
  இந்தப் பொதுக் கூட்டத்தில் அந்த இயக்கத்தைச் சேர்ந்த டைசன், இளமாறன், அருண்குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
  பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் திருமுருகன் காந்தி கூறியதாவது: பாஜகவின் தமிழன விரோதக் கொள்கையை அம்பலப்படுத்தும் விதமாக தமிழக முழுவதும் மே 17 இயக்கம் சார்பில், பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
  இந்த நிலையில் புதுச்சேரியில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்துக்குக் காவல் துறை முதலில் அனுமதி மறுக்கக் காரணம் பாஜகவின் அழுத்தமும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் தலையீடுமே காரணமாகும். அதை நாங்கள் வெற்றிகரமாக முறியடித்துவிட்டோம்.
  எங்கள் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்காக நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம். பொய் வழக்கு போடுபவர்கள் நிச்சயம் ஆட்சியை இழப்பார்கள்.
  ஐ.நா. கவுன்சிலில் வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்குக் காரணம் இந்திய அரசின் செயலற்ற தன்மையும், இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிப்பதுவுமே காரணம்.
  முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டும் அவர்களைச் சிறையில் வைத்திருப்பது சட்ட விரோதமான செயல். அவர்களை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்றார் திருமுருகன் காந்தி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai