சுடச்சுட

  

  இந்திய அறுவைச் சிகிச்சை இரைப்பை குடலியல் கழக மாநாடு ஜிப்மரில் சனிக்கிழமை நடைபெற்றது.
  மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள 184 மருத்துவமனைகளிலிருந்து சுமார் 1,000 மருத்துவர்களும், அதேபோல நேபாளம், இலங்கை, சவூதி அரேபியா நாடுகளிலும் இருந்தும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
  ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா, மலேசியா நாடுகளிலிருந்து புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
  ஜிப்மர் இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா மாநாட்டைத் தொடக்கிவைத்து உரையாற்றினார்.
  இந்திய அறுவை சிகிச்சை, இரைப்பை குடலியல் கழகத்தின் தலைவர் சீதாராம், செயலர் பிரதீப் ரெபெலா, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாநாட்டுத் தலைவர் பிஜு பொட்டகாட் வரவேற்றார். மாநாட்டுச் செயலர் கலையரசன் நன்றி கூறினார்.
  இந்தியாவில் கல்லீரல் அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கணைய அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை, புற்று நோய், ரோபோடிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் நடைமுறையில் உள்ள நவீன சிகிச்சை முறைகள் குறித்து விவாதித்தினர்.
  இளம் மருத்துவர்களுக்காக லேப்ராஸ்கோபி, ரோபோடிக் அறுவை சிகிச்சையில் உள்ள நவீன திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடைபெற்றன.
  இந்தியாவிலேயே முதல் முறையாக செவிலியர்களுக்காக 'இரைப்பை குடலியல் துறையில் செவிலியர்களின் பங்கு' என்ற தலைப்பில் ஒரு தேசிய மாநாடு நடைபெற்றது. மேலும், 'அறுவை சிகிச்சை உத்திகள்' என்ற தலைப்பில் மருத்துவர்களுக்கான சிறப்புக் கருத்துப் பயிலரங்கம் நடைபெற்றது. 'இரைப்பை குடலியல் புற்று நோய்களின் சிகிச்சை மற்றும் பராமரிப்பு' என்ற தலைப்பில் தொடர் மருத்துவக் கருத்தரங்கும் நடைபெற்றது.
  தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (அக். 8) பயிலரங்கங்கள், கருத்தரங்குகள், விவாத மேடைகள், ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தல், குழு விவாதங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai