Enable Javscript for better performance
டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் சாவு?- Dinamani

சுடச்சுட

    

    பாகூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
    புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 2 பேர் உயிழந்துள்ளனர். இதற்கிடையே, பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (35), (படம்) காய்ச்சல் காரணமாக கடந்த 3 நாள்களுக்கு முன் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
    அவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அவரது உறவினர்கள் டெங்கு காய்ச்சலால்தான் பாக்கியலட்சுமி இறந்தார் எனக் கூறினர். இருப்பினும், சுகாதாரத் துறை அதிகாரிகள் இதை உறுதிபடுத்தவில்லை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai