சுடச்சுட

    

    டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆளுநர் கிரண் பேடி 5 கி.மீ. நடைபயணம்

    By DIN  |   Published on : 08th October 2017 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் பொதுமக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சனிக்கிழமை ஆளுநர் மாளிகையிலிருந்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி 5 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டார்.
    தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் டெங்கு காய்2ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்அரசு மருத்துவமனையில் தனிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஆளுநர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும் தனித்தனியே ஆய்வு மேற்கொண்டு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனர்.
    இந்த நிலையில், பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்தின் தொகுதியான காமராஜர் தொகுதிக்கு உள்பட்ட கிருஷ்ணா நகர், முதல்வர் நாராயணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆளுநர் கிரண் பேடி அதிரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    இதன் தொடர்ச்சியாக, மக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆளுநர் மாளிகையிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் எனவும் கிரண் பேடி அறிவித்திருந்தார்.
    அதன்படி, சனிக்கிழமை காலை ஆளுநர் கிரண் பேடி நடைபயணம் மேற்கொண்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடைபயணம் கடற்கரைச் சாலை, குருசுகுப்பம், சோலை நகர், முத்தியால்பேட்டை, செஞ்சி சாலை வழியாகச் சென்று ஆளுநர் மாளிகையில் முடிவடைந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai