சுடச்சுட

    

    டெங்கு: புதுவை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 50 படுக்கைகள்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ்

    By DIN  |   Published on : 08th October 2017 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளுக்காக கூடுதலாக 50 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் தெரிவித்தார்.
    டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    மேலும், சுகாதாரத் துறை சார்பில் அரசியல் கட்சியினர், பல்வேறு தொண்டு நிறுவனத்தினர் காய்ச்சலைக் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கி வருகின்றனர்.
    இந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமையில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    இதில், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை விநியோகித்தனர்.
    நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் கூறியதாவது:
    டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
    இளைஞர் காங்கிரஸ் சார்பில் தற்போது நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தட்ப வெட்ப நிலை மாறும்போது, வெவ்வேறு விதமான நோய்கள் வருவதற்கான சூழல் உருவாகிறது.
    எனவே, டெங்கு, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கான அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனைத்து நோய்களைக் கண்டறிவதற்கும் இயந்திரங்கள் உள்ளன.
    டெங்கு நோயாளிகளுக்காக கூடுதலாக 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள் கையிருப்பு வைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் மல்லாடி கிருஷ்ண ராவ்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai