சுடச்சுட

  

  வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்தில் ஜெபமாலை கண்காட்சி

  By DIN  |   Published on : 08th October 2017 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜெபமாலைகள், புனிதர்கள் பயன்படுத்திய பழைமையான பொருள்கள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
  கண்காட்சியை முன்னிட்டு, காலை முதல் மாலை வரை தொடர் திருப்பலிகளும் நடைபெற்றன.
  இதுகுறித்து திருத்தல பங்குத் தந்தை பிச்சைமுத்து கூறியதாவது: முதல் முறையாக புதுச்சேரியில் இதுபோன்றதொரு அரிய வகை புனிதர்கள் பயன்படுத்தி பொருள்கள், ஜெபமாலைகள் கண்காட்சி நடக்கிறது.
  கடந்த 19-ஆம் நூற்றாண்டில் தேவாலயம் கட்டப்பட்ட பின்னர், திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு அரிய வகை திருப்பொருள்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார்.
  கோயம்புத்தூர் மாதா ரோசரி அருங்காட்சியக பொறுப்பாளர் சுகந்தி ரோஸ் கூறியதாவது:
  கடந்த 17 ஆண்டுகளாக புனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள், ஜெபமாலைகளை கடினப்பட்டு சேகரித்து வருகிறேன். முதல் முதலில் செயின்ட் ஜான் பால்-2 பயன்படுத்திய தங்கத் திருப்பொருள் கிடைத்தது முதல் இதில் ஆர்வம் ஏற்பட்டது.
  உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து போப்பாண்டவர் அனுமதியுடன் புனிதர்களின் எலும்புகள், துணி மணிகள், ஜெபமாலைகள், நாணயங்கள், அடையாளச் சின்னங்களை அருங்காட்சியமாக வைத்துள்ளோம். ஏற்கெனவே காட்பாடி, கோவை, கோவில்பட்டியில் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் வேளாங்கண்ணியில் நடத்த உள்ளோம் என்றார் அவர்.
  தொடர்ந்து, செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை குரு பாக்கியம் ரெஜிஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலியும், பின்னர் தேர்பவனியும் நடைபெற்றது.
  அருள்நிறை ஆலயத்தின் உள்புறத்தில் அமைந்திருக்கும் நற்கருணை சிற்றாலயத்தில் இமாகுலேட் சபை கன்னியர்களின் ஆயிரம் மணி ஜெபமாலையும் நடைபெற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai