சுடச்சுட

  

  புதுச்சேரி - விழுப்புரம் பயணிகள் ரயிலில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 469 மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.
  புதுவை மாநில ஓவியர் மன்றம் சார்பில், குழந்தைகளிடம் ஓவியக் கலையைத் தூண்டும் வகையிலும் ஆண்டுதோறும் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு நோய்த் தடுப்பூசி மூலம் வலிமையான இந்தியா என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது.
  இந்தப் போட்டியில் புதுவையைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து 3 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.  சட்டப்பேரவைத் துணைத் தலைவர் சிவக்கொழுந்து தலைமை வகித்தார். போட்டியை அன்பழகன் எம்.எல்.ஏ.,  கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநர் கணேசன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் அன்பழகன் வரவேற்றார். ஓவியர் மன்றத் தலைவர் இபேர் விதிகளை விளக்கிக் கூறினார்.
  புதுச்சேரியில் இருந்து மாலை 3.30 மணியளவில் ரயில் புறப்பட்டவுடன் போட்டி தொடங்கியது. ரயிலின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவிகள் ஓவியங்களை வரைந்து அசத்தினர்.  மாலை 4.50 மணிக்கு ரயில் விழுப்புரத்தை அடைந்தது. விழுப்புரம் ரயில் நிலைய மேலாளர் பாலகிருஷ்ணன் மாணவர்களை வரவேற்று சிற்றுண்டி வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
  புதுவை,  காரைக்கால், காஞ்சிபுரம், கடலூர், சென்னை,  திருவண்ணாமலை,  விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
  ஒவ்வொரு பெட்டிக்கும் 15 ஆசிரியர்கள் வீதம் 65 ஆசிரியர்கள், 12 என்.எஸ்.எஸ். மாணவர்கள்,  2 செவிலியர்கள் போட்டி நடத்தும் பணியில் ஈடுபட்டனர். வருகிற நவம்பர் மாதம் 12 -ஆம் தேதி ஹோட்டல் கிரீன் பேலஸில் பரிசளிப்பு விழா நடைபெறும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai