Enable Javscript for better performance
காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு நலச்சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    சங்க அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார். தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் குப்புராஜ், செயலர் உத்திராடம்,  துணைச் செயலர் கோவிந்தன், பொருளாளர் மகேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    புதுச்சேரியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாப்பட்டு பகுதியில் அமிலக் கழிவுகளை நிலத்தடி நீரில் கலந்தும், நச்சுப் புகையை வெளியேற்றி வரும் தனியார் தொழிற்சாலையை மூட வேண்டும். டெங்குவை ஒழிக்க கிராமந்தோறும் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai