சுடச்சுட

    

    புதுச்சேரி ஜேசிஐ ராயல் சார்பில் சாதனையாளர் தின விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை கோரிமேடு மதர் தெரசா பட்ட மேற்படிப்பு - ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
    இயக்கத் தலைவர் எஸ்.பாலு வரவேற்றார். திட்டத் தலைவர் முகுந்தன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நிர்மலா சரவணன் முன்னிலை வகித்தார். இதில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பல்துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.  மண்டல நிர்வாகிகள் சுரேஷ், வினோத்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். நிர்வாகிகள் கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர். செயலர் பார்வேந்தன் நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai