Enable Javscript for better performance
தீபாவளி ஊக்கத் தொகை தொடர்பாக அரசாணை வெளியிட வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தீபாவளி ஊக்கத் தொகை தொடர்பாக அரசாணை வெளியிட வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 09th October 2017 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளி ஊக்கத் தொகை தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிட வேண்டும் என புதுச்சேரி அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியது.
    இதுகுறித்து அதன் பொதுச் செயலர் எம்.பிரேமதாசன் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நிகழாண்டு வழங்க வேண்டிய ஊக்கத் தொகைக்கான ஆணையை வெளியிட்டு, தொகையையும் வழங்கி வருகின்றனர். ஆனால், புதுவை அரசோ இதுவரை அது குறித்த எந்த ஆணையையும் வெளியிடாமல் தாமதம் செய்து வருகிறது.
    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், ஊக்கத் தொகை குறித்து அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, 8 மாத ஊதிய நிலுவைத் தொகை போன்றவற்றை வழங்காமல் உள்ள நிலையில், ஊக்கத் தொகையையும் தராமல் விடுவார்களோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.
    எனவே, ஊக்கத் தொகை குறித்த ஆணையை புதுவை அரசு உடனே வெளியிட வேண்டும்.  மேலும், அனைத்துப் பொதுத் துறை, தன்னாட்சி உள்ளாட்சி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் என அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே நேரத்தில் அரசாணை வெளியிட வேண்டும். தினக்கூலி, பகுதி நேர, ஒப்பந்த, ஊழியர்களுக்கும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai