சுடச்சுட

    

    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
    பொதுவாக பண்டிகைகளுக்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே நகர்ப் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை களைகட்டத் தொடங்கிவிடும். அந்த வகையில், தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், புதுவையில் தீபாவளி விற்பனை மும்முரமாகி உள்ளது.
    புதுவையின் முக்கிய வணிக பகுதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கொசக்கடை வீதிகளில் ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது.
    அதேபோல, நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் சண்டே மார்க்கெட்டிலும் பொருள்கள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.
    சண்டே மார்க்கெட்டில் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வாரந்தோறும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை அனைத்து வகையான பொருள்களும் இங்கு விற்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் திரளாகக் குவிந்திருந்தனர். தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.  
    இதனால், தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏஎப்டி திடலில் அமைக்கப்பட்டுள்ள பாப்ஸ்கோ சிறப்பங்காடி மற்றும் நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளிலும் மக்கள், தங்களது குழந்தைகளுடன் சென்று அவர்களுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.
    கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சாலையில் நடந்து செல்வோரிடம் பிக்பாக்கெட், வழிப்பறி, சங்கிலிபறிப்பு சம்பவங்களைத் தடுக்க நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, கொசக்கடை வீதி, அண்ணா சாலையில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai