சுடச்சுட

  

  பாஜகவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: மாநிலத் தலைவர் வி.சாமிநாதன்

  By DIN  |   Published on : 09th October 2017 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் பாஜகவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:  மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி இந்திய இறையாண்மையைச் சீர்குலைக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  நல்ல வாழ்வை அமைத்து அமைதியாக வாழ வேண்டிய இளைஞர்களைத் தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேடி வருகிறார்.  அவரது நடவடிக்கைகள் மீது தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
  அங்கு ஒன்றும் செய்ய முடியாது என்பதால், புதுவையில் வந்து பொதுக் கூட்டம் நடத்த முயன்றார்.  இவரை போலத்தான் கடந்த காலத்தில் சீமானும் செய்தார். அவர் புதுவையில் மாணவர்களைத் தூண்டிவிட்ட சம்பவங்கள் சட்டம், ஒழுங்கைச் சீர்குலைத்த போது அவரை கைது செய்ய புதுவை போலீஸார் திணறினர்.  அதேபோல, திருமுருகன் காந்தியும் புதுவையை அரசியல் களமாகப் பயன்படுத்த முயன்றார். இது சட்டம், ஒழுங்கு பிரச்னையைக் கொண்டு வரும் என பாஜக கூறியது. உளவுத் துறையும் அப்படிச் சொன்னதால், கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.
  ஆனால், மே 17 இயக்கத்தினர் காவல் துறை எஸ்.எஸ்.பி. ராஜீவ் ரஞ்சனிடம் தகராறு செய்தனர்.  அப்போது பாஜவினர் எனது தலைமையில் சென்று கூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று வலியுறுத்தினோம்.  
  அதனால், புதுவை போலீஸாருக்கு ஏற்படும் சிரமங்களையும்,  சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்தும் விளக்கினோம்.  தேச விரோத பேச்சுகள் இறையாண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும், புதுவை அரசு மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்றும் கூறினோம்.   பின்னர், நாங்கள் வெளியே வந்த போது மே 17 இயக்கத்தினர் எங்கள் மீது கல் எறிந்தார்.  அது புதுவை மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் கணேஷ் கார் மீது விழுந்தது. அதில் கார் கண்ணாடியும் உடைந்தது. இது குறித்து போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
  புதுவை மாநிலம் தேச விரோதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுப்போம். கல் வீசிய மே 17 இயக்கத்தினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  புதுவையில் பாஜக வளர்ந்து வருகிறது. அதைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது என்றார் சாமிநாதன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai