Enable Javscript for better performance
புதுவை தெற்கு மாநில திமுக சார்பில் அக். 15-இல் அண்ணா பிறந்த நாள் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை தெற்கு மாநில திமுக சார்பில் அக். 15-இல் அண்ணா பிறந்த நாள் போட்டிகள்

    By DIN  |   Published on : 09th October 2017 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை தெற்கு மாநில திமுக சார்பில் வருகிற 15-ஆம் தேதி மாணவர்களுக்கு அண்ணா பிறந்த நாள் போட்டிகள் நடைபெறும் என அதன் அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் புதுச்சேரியில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
    அதன் தொடர்ச்சியாக
    10-ஆம் ஆண்டாக அண்ணாவின் 109-ஆவது பிறந்த தினத்தையொட்டி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெறும் பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல் போட்டிகள், வருகிற 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும்.
    போட்டிகளை மாநில இளைஞரணிச் செயலர் மு.பெ.சாமிநாதன், துணைச் செயலர் சுப.சந்திசேகரன் ஆகியோர் தொடக்கி வைக்கின்றனர். இலக்கிய அணி துணைச் செயலர் ஈரோடு இறைவன் தலைமை நடுவராக இருந்து போட்டிகளை நடத்துகிறார்.
    இந்தப் போட்டிகளில் புதுச்சேரி தெற்கு மாநிலத்துக்கு உள்பட்ட உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், பாகூர், நெட்டப்பாக்கம், மங்கலம், வில்லியனுர், உழவர்கரை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுகளில் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அந்த அறிக்கையில்
    கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai