Enable Javscript for better performance
பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்: திமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர்: திமுக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 09th October 2017 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தியால்பேட்டை தொகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என திமுக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க. செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் தனகோடி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் தனசேகர், தங்கராஜ், நடராஜ், அல்போன்ஸ், தொகுதி நிர்வாகிகள் ரவி, பலராமன், கலைவாணி, செல்வம், சிவா, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    கூட்டத்தில், முத்தியால்பேட்டை மார்க்கெட்டை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும், சுகாதார மற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்கள் அதிகம் பாதிக்கப்பட்ட தொகுதியாக முத்தியால்பேட்டை உள்ளது. எனவே சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்.
    காலை 5 மணி முதல் 9 மணி வரை இருந்த குடிநீர் விநியோகம் தற்போது காலை 5 மணி முதல் 7 மணி வரையாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமான குடிநீரை 4 மணி நேரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த கொசு மருந்து அடித்து கழிவுநீர் வாய்க்கால்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.  நகராட்சி அலுவலகமாக மாற்றப்பட்டுள்ள முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தைக் குளிர்சாதன வசதி கொண்ட திருமண மண்டபமாக மாற்றி, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வேண்டும்.
    காந்தி வீதி, ஏழை மாரியம்மன் கோயில் வீதி சந்திப்பு போக்குவரத்து சிக்னலைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளைச் சரி செய்யாத அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரின் மெத்தனப் போக்கை வீதிக்கு வீதி தெருமுனை பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
    நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai