சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் வரை மாதந்தோறும் கிராம சபைக் கூட்டம் நடத்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
  ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கிராமத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றைத் தீர்க்க வலியுறுத்தி தொடர்புடைய துறைகளுக்கு கோரிக்கை மனுக்களைத் தர முடியவில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.
  இதையடுத்து,  உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் வரை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களே மாதந்தோறும் கிராம சபைக் கூட்டம், மக்கள் குறைகேட்பு கூட்டத்தை அந்தந்த தொகுதி தொடர்புடைய எம்.எல்.ஏ. தலைமையில் நடத்த வேண்டும். வருவாய்த் துறை,  காவல் துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai