சுடச்சுட

    

    புதுவை பல்கலை. சார்பில் நடைபெற்ற வன விலங்கு வார விழா கருத்தரங்கில் துளிர் இல்ல மாணவர்கள் பரிசு பெற்றனர்.
    அச்டோபர் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை வன விலங்கு வார விழா கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, வன விலங்குகள் தொடர்பான கருத்தரங்கம்  மற்றும் பல்வேறு வகையான போட்டிகள் புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றன.
    புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் துளிர் இல்ல மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். நோணாங்குப்பத்தில் உள்ள உதவிக் கரங்கள் மையத்தில் செயல்பட்டு வரும் ராகேஷ் ஷர்மா துளிர் இல்ல மாணவர்கள்  நாடகப் போட்டியில்  முதல் பரிசு வென்றனர்.
    பல்கலை. துணைவேந்தர் அனிஷா பஷிர் கான் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்துப் பாராட்டினார்.
    அறிவியல் இயக்க உறுப்பினர் ஜெயந்தி தலைமையில் பங்கு பெற்ற மரியம் மிர்சாகானி துளிர் இல்ல மாணவர்கள் இரண்டாம் பரிசு வென்றனர். இல்ல ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம்
    உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai