சுடச்சுட

    

    கிருமாம்பாக்கம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
    கிருமாம்பாக்கம் முன்னடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரசன் (70). சனிக்கிழமை வயல் வேலைக்குச் சென்றவர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.
    இதனால், சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் வயல் வெளிக்குச் சென்று பார்த்த போது அங்குள்ள வாய்க்காலில் அரசன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    வாய்க்காலை தாண்டும் போது அவர் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai