சுடச்சுட

  

  புதுச்சேரி உப்பனாறு முகத்துவாரம் பகுதியில், உப்பாறு-பெரியவாய்க்கால் தூர் வாரும் பணியை முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
  வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும், கழிவுநீர் விரைந்து செல்லவும் ஏதுவாக ரூ.90 லட்சத்தில் உப்பனாறு முகத்துவாரமும், ரூ.34 லட்சத்தில் உப்பாறு-பெரிய வாய்க்கால் இணைப்பு வாய்க்காலும் தூர்வாரப்பட உள்ளன. இந்தப் பணிகளை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மல்லாடி, கந்தசாமி, அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, அரசுச் செயலர்கள் மிகிர்வரதன், பார்த்திபன், தலைமைப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர்கள் தாமரைபுகழேந்தி, ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai