சுடச்சுட

    

    கரும்பு நிலுவைத் தொகை கோரி முதல்வரிடம் விவசாயிகள் மனு

    By DIN  |   Published on : 10th October 2017 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.20 கோடியை வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் முதல்வர் நாராயணசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
    புதுச்சேரி கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக கூட்டுறவு சர்க்கரை ஆலையால் வழங்கப்பட வேண்டிய  நிலுவைத் தொகை ரூ.10 கோடி, இந்த ஆண்டுக்கான அரைவைத் தொகை ரூ.10 கோடி ஆகியவற்றை வழங்க வலியுறுத்தி முதல்வர் நாராயணசாமியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
    பின்னர், அமைச்சர்கள் கமலக்கண்ணன், நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ராதாகிருஷ்ணன் எம்.பி. ஆகியோரிடமும் மனு அளித்தனர்.
    இது தொடர்பாக  விவசாய சங்கத் தலைவர் செந்தில்குமார் கூறுகையில், விவசாயிகள் வங்கிக் கடனை  மாநில அரசு தள்ளுபடி செய்தும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறார்.விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய  கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai