சுடச்சுட

    

    புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்தார்.
    கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா மகள் ஜாஸ்மின் பேகம் (13). அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கடும் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
    பின்னர், தீவிர சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    இதற்கிடையே, சிகிச்சை பலனளிக்காமல் ஜாஸ்மீன் பேகம் திங்கள்கிழமை  உயிரிழந்தார்.
    ஏற்கெனவே புதுச்சேரியில் டெங்குவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai