சுடச்சுட

  

  புதுவையில் உயர்நீதிமன்ற கிளை அமைக்க நீதிபதிகள் ஒத்துழைப்பு அவசியம்: முதல்வர் நாராயணசாமி

  By DIN  |   Published on : 10th October 2017 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பதற்கு நீதிபதிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
  காலாப்பட்டு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில், அகில இந்திய அளவில் மாணவிகளுக்கான 41ஆவது மாதிரி நீதிமன்றப் போட்டி கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து 3 நாள்கள் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், பெங்களூர், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 42 கல்லூரிகளில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
  போட்டியில் பஞ்சாப் சட்டக் கல்லூரி முதலிடத்தையும், சென்னை சீர்மிகு சட்ட பல்கலைக்கழகம் 2-ஆம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் வரவேற்றார்.
  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிந்தராஜ், சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஐசக் மோகன்லால், கேரள உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் காளீஸ்வரன் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
  புதுவை முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
  அப்போது அவர் பேசியதாவது:  புதுவை சட்டக் கல்லூரிக்கென தனிப்பெருமை உள்ளது. இங்கு படித்தவர்கள் நீதிபதிகளாகவும், மிக முக்கியப் பொறுப்புகளிலும் உள்ளனர். பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் நிகழ்ந்து வரும் இன்றைய சூழலில், அவர்களுக்காக இங்கு நடத்தப்பட்ட மாதிரி நீதிமன்றப் போட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
  அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி சட்டப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும். புதுவையில் உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்படும். இதுதொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். இதற்கு நீதிபதிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai