சுடச்சுட

  

  புதுச்சேரியில் கலால் வரி உயர்வு காரணமாக, மதுபானங்கள் விலை திடீரென அதிகரித்துள்ளது.
  புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபானக்  கடைகள், 96 சாராயக் கடைகள், 75 கள்ளுக் கடைகள் உள்ளன. புதுச்சேரியில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மதுபானங்களுக்குப் பெயர் பெற்ற புதுச்சேரியில் கலால் வரியை அரசு திடீரென உயர்த்தி அறிவித்துள்ளது.
  இதனால் விஸ்கி, ரம், பிராந்தி போன்ற மதுபானங்கள் அடிப்படை விலையான ரூ. 68-இல் இருந்து ரூ.75க்கும், ரூ. 78-இல் இருந்து 90-க்கும், ரூ. 85-இல் இருந்து 100-க்கும் விலை உயர்ந்துள்ளன.  அதேபோல பீர் விலை ரூ. 4.50 முதல் ரூ.6-ம், ஒயின் விலை ரூ. 15-இல் இருந்து ரூ.20-ம் உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கான கலால் வரியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், புதிய விலைப்பட்டியல் மதுக் கடைகளில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் ரூ. 2 முதல் 20 வரை மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
  விலை உயர்வால், வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து விற்பனை பாதிக்கப்படும் என்றும், ஆண்டுக்கு 3 முறை கலால்வரி ஏற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் மதுக் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். புதுச்சேரி அரசுக்கு கலால்துறை மூலம் ஆண்டுக்கு ரூ. 671 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. தற்போது உயர்த்தப்பட்ட வரி மூலம் கலால்துறைக்கு கூடுதலாக ரூ. 30 கோடி வருவாய் கிடைக்கும். கலால் துறைக்கு ஆண்டு வருமானம் ரூ. 700 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், மதுபான வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கலால்துறை விளக்கம் அளித்து உள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai