சுடச்சுட

    

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான உண்டு உறைவிட விடுதி தொடக்கம்

    By DIN  |   Published on : 10th October 2017 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஜிப்மர் மருத்துவமனை, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜால் தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் பிரத்தியேக வசதிகளுடன் கூடிய உண்டு உறைவிட விடுதித் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
    ஜிப்மரில் சிகிச்சைபெறும் புற்றுநோயாளிகளில் சுமார் 15 முதல் 18 வரை 21 வயதுக்குக் குறைவான புதிய நோயாளிகளாக ஒவ்வொரு ஆண்டும் கண்டறியப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றனர்.
    புற்றுநோய் சிகிச்சை என்பது 6 முதல் 8 மாதங்கள் வரை தொடர்ந்து எடுக்க வேண்டிய சிகிச்சையாகும். சிகிச்சையின் போது குழந்தைகள் சுத்தம், சுகாதாரம், நல்ல உணவு, தங்குமிடம் போன்றவை மிக மிக அவசியமானதாகும்.
    இதற்கான ஒரு தங்கும் விடுதியை ஜிப்மர் நிர்வாகம் ஜால் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.  இதற்கான திறப்பு விழா ஜிப்மர் வளாகத்தில் இயக்குநர் டாக்டர் பரிஜா தலைமையில் நடைபெற்றது. புற்றுநோய் மருந்தியல் துறைத் தலைவர் பிஸ்வஜித் துபாஷ் முன்னிலை வகித்தார். ஜால் நிறுவனத்தின் பெர்ட்டா மற்றும் சதீஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai