சுடச்சுட

  

  அரசுச் செயலர்களின் செயல்பாடு: ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 11th October 2017 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அரசுச் செயலாளர்களின் செயல்பாடுகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் வெளிவருகிறது; எனவே, அவர்கள் திட்டமிட்டு சிறப்பாகச் செயலாற்ற வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.
  இதுதொடர்பாக சமூக வலைவளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: பிரதேச நிர்வாகிக்கு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் வளங்கள் குறைவாக இருப்பது சவால் இல்லை. ஆனால் இருக்கிற வாய்ப்புகளை உரிய முறையில் உபயோகப்படுத்துவதுதான் சவாலாக உள்ளது.
  மக்களின் வரிப்பணத்தை நியாயமாக செலவு செய்யும் பொறுப்பு அனைத்து அரசு ஊழியர்களின் கடமையாக உள்ளது. இந்த விஷயத்தில் மூத்த அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அதனால்தான் மூத்த அதிகாரிகள் அதிக அதிகாரங்களையும், வசதிகளையும் கொண்டுள்ளனர். எனவே, மூத்த அதிகாரிகளின் மேற்பார்வை கூடுதலாக தேவைப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
  இங்கு சுகாதாரத் துறைச் செயலாளர் கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுட்டி காட்டுபவராகத்தான் உள்ளார். இது தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் பெற்ற தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் பல தகவல்கள் வரும்.
  பாதிப்புகள், மக்களுக்கு சிரமம் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த திட்டமிடுங்கள். பாதிப்புகள் இயற்கையானது. ஆனால், அரசு ஊழியர்கள் அதை குறைக்கும் விதத்தில் பணிபுரிய வேண்டும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai