சுடச்சுட

  

  கண்ணாடி தொழிற்சாலையில் வட மாநிலத் தொழிலாளி திடீர் சாவு: போலீஸார் விசாரணை

  By DIN  |   Published on : 11th October 2017 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே தனியார் கண்ணாடி தொழிற்சாலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கன்னியக்கோவில்-மணப்பட்டு சாலையில் தனியாருக்குச் சொந்தமான கண்ணாடி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மட்டுமன்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே, அங்கு வேலை செய்து கொண்டிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் (51) என்ற தொழிலாளி திங்கள்கிழமை திடீரென மயங்கி விழுந்தார்.
  அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
  இந்தத் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், இரவில் அதிக ஓசை எழுப்புவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக ஆளுநர் கிரண் பேடிக்கும் புகார் அனுப்பினர். இதையடுத்து, இரண்டு முறை ஆளுநர் கிரண் பேடி இந்த தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு தொழிற்சாலை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai