சுடச்சுட

  

  குடியிருப்பு நலச் சங்கங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்: உழவர்கரை நகராட்சி

  By DIN  |   Published on : 11th October 2017 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உழவர்கரை  தொகுதிக்குள்பட்ட 7 தொகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்பு நல்வாழ்வுச் சங்கங்கள், நிறைவேற்றப்படாத அடிப்படைத் தேவைகள், பிரச்னைகள் குறித்த விவரங்களை அளிக்கலாம் என ஆணையர்
  எம்.எஸ். ரமேஷ் தெரிவித்துள்ளார்.
  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உழவர்கரை நகராட்சி அதன் பணியை துரிதமாகச் செயல்படுத்தும் பொருட்டு, இந்த நகராட்சியில் உள்ள 7 தொகுதிகளிலும் உள்ள அனைத்து குடியிருப்பு நல வாழ்வுச் சங்கங்களின் பட்டியல் அவசியமாக தேவைப்படுகிறது.
  மொத்தம் உள்ள வீடுகளின் எண்ணிக்கை, காலிமனைகளின் எண்ணிக்கை, நகராட்சி சார்பாக பூர்த்தி செய்யப்படாத அடிப்படை தேவைகள் மற்றும் நகரில் உள்ள இதர பிரச்னைகள், சங்கத்தின் இரு நிர்வாகிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை ஆணையர், உழவர்கரை நகராட்சி, ஜவகர் நகர், புதுச்சேரி என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ குடியிருப்பு நல வாழ்வுச் சங்கங்கள் அளிக்க வேண்டும்.
  மேற்கூறிய தகவல்கள் நகராட்சி பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களின் ஒப்புதலுடனும், ஆலோசனைப்படியும், நிதி நிலைமைக்கு ஏற்பவும் நகரில் உள்ள தேவைகள், பிரச்னைகளுக்கு ஏற்ப முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
  மேலும், தொகுதி வாரியாக குடியிருப்பு நல வாழ்வுச் சங்கங்களுடைய தூய்மையை மையமாகக் கொண்டு விரைவில் நகராட்சி சார்பில் பலவித போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
  போட்டியில், வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத் தன்று நகராட்சி சார்பில் பரிசு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai