சுடச்சுட

  

  கேரளத்தில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கொலையைக் கண்டித்து  புதுவையில் பாஜகவினர் போராட்டம்: 200 பேர் கைது

  By DIN  |   Published on : 11th October 2017 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள மாநிலத்தில் பாஜக, ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து புதுவை மாநில பாஜக சார்பில் செவ்வாய்க்
  கிழமை பேரணி, முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது, கேரள முதல்வர் உருவப்பொம்மை எரிக்க முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
  கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ், ஹிந்து அமைப்புகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இரு தரப்பிலும் நிர்வாகிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
  ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கொலை செய்யப்படுவதைக் கண்டித்து, புதுவையில் மாநில பாஜக சார்பில் செவ்வாய்க்கிழமை சுதேசி ஆலையில் இருந்து பேரணி நடைபெற்றது. மறைமலையடிகள் சாலை, நெல்லித்தோப்பு சந்திப்பு, இந்திரா காந்தி சிலை வழியாக ரெட்டியார்பாளையத்தில் உள்ள நகரமைப்பு திட்ட அலுவலகத்தை அடைந்தது.
  பேரணி, போராட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, சங்கர், மாநில பொதுச் செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர். அங்கு நகரமைப்புத் திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். இதனால் அலுவலகத்துக்கு வந்து செல்வோர் பாதிப்புக்கு ஆளாகினர்.
  பின்னர், போராட்டக்காரர்கள் திடீரென கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றனர். அதை போலீஸார் தடுத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai