சுடச்சுட

    

    "சீல்' வைக்கப்பட்ட கோயிலில் திடீர் பூஜை: போலீஸார் விசாரணை

    By DIN  |   Published on : 11th October 2017 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் சீல் வைக்கப்பட்ட கோயிலில் திடீர் பூஜை நடைபெற்றது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
    புதுவையில் என்சிசி-க்குச் சொந்தமான இடம் கருவடிக்குப்பத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் அங்கு சிறிய விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர், அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சிறிய கோயில் கட்டி அதற்கு ஸ்ரீ வலம்புரி வெற்றிவிநாயகர் என பெயரிட்டு கும்பாபிஷேகமும் நடத்தி சுற்றுச்சுவர் எழுப்பினர்.
    இதனை அறிந்த என்சிசி அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் 2 மாதங்களுக்கு முன் கோயிலுக்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை கோயில் சீல் உடைக்கப்பட்டு, கோயிலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
    இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வேலு லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai