சுடச்சுட

    

    டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த பாமக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 11th October 2017 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் டெங்கு பாதிப்பை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநிலச் செயலாளர் ஜெ.கோபி தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    புதுச்சேரியில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை உருவாக்கக் கூடிய ஏடிஸ் கொசுவை ஒழித்தால் மட்டுமே பொதுமக்களை பாதுகாக்கமுடியும்.
    ஆனால், டெங்கு கொசுவை கட்டுப்படுத்த ஆளும் அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.
    ஆளும் ஆட்சியாளர்களும் துணைநிலை ஆளுநர் கிரண்
    பேடியும் பல இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், இவர்களின் ஆய்வுக்கு பிறகும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை.
    ஆனால், டெங்கு காய்ச்சல் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாரயாணசாமியும் மாறுபட்ட புள்ளிவிவரங்களைக் கொடுத்து மக்களை குழப்பி வருகின்றனர்.
    மேலும் இவர்களின் அதிகார மோதல் போக்கு காரணமாக அதிகாரிகள் மக்களுக்கு பணியாற்றுவதில் தொய்வுஏற்பட்டுவருகிறது.
    மேலும், டெங்குவை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் கொசுஒழிப்பு புகைமூட்டத்தை அடிக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே போல மழைக் காலத்துக்கு முன்பாகவே அனைத்து கால்வாய்களையும்,  நீர்நிலைகளையும் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் கோபி.
    பாமக உயர்மட்டக் குழுத் தலைவர்  கே.ஜி.ராமகிருஷ்ண கவுண்டர், இளைஞரணித் தலைவர் குமார், மாவட்ட இளைஞரணித்தலைவர் முரளி (எ) முருகன், துணைச் செயலாளர் எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai