சுடச்சுட

  

  தலைமறைவு குற்றவாளியின் சொத்துகளை முடக்கி காவல் துறை நடவடிக்கை

  By DIN  |   Published on : 11th October 2017 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் பிரகடனப்படுத்தப்பட்ட தலைமறைவு குற்றவாளி தட்டாஞ்சாவடி செந்திலின் சொத்துகளை முடக்கி  காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
  தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் ரமேஷ் (எ) செந்தில். கோரிமேடு டிநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக  தேடப்பட்டுவரும்  இவர், கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக உள்ளார்.
  இது சம்பந்தமாக செந்திலை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்து புதுச்சேரி குற்றவியல் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் அவரின் வங்கி கணக்கில் உள்ள சுமார் ரூ.2 கோடி பணத்தையும், ரூ.40 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளையும் முடக்கி ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றமும் குற்றவாளி செந்திலை உடனடியாக புதுச்சேரி குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்திலைப் பற்றி சரியான துப்பு, தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் எனவும் காவல் துறை அறிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai