சுடச்சுட

  

  தீபாவளி போனஸ் அறிவிப்பு எப்போது? அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

  By DIN  |   Published on : 11th October 2017 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நிகழாண்டு தீபாவளி போனஸ் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று புதுச்சேரி அரசு ஊழியர்கள், அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
  புதுவையில் அரசு மற்றும் அரசு சார்பு, கூட்டுறவு நிறுவனங்களில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் அரசால் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 2016-ஆம் ஆண்டு புதுச்சேரி  மாநில அரசு ஊழியர்களுக்கு, அதாவது பி, சி, டி பிரிவுகளைச் சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முதல்வர் நாராயணசாமி அரசு உத்தரவிட்டது. அதன்படி, போனஸாக ரூ.6,908 வழங்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1,184 போனஸும், ஓராண்டு பணி நிறைவு செய்த, 3 ஆண்டுகளுக்குள் பணி செய்த தாற்காலிக பகுதி நேர மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.1,000-மும்,
  மேலும், உற்பத்தி சார்ந்த போனஸாக அரசு சார்ந்த நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டது.
  நிகழாண்டு, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இதுவரை போனஸ் அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. இது அரசு ஊழியர்கள், சார்பு நிறுவன ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
  புதுச்சேரி மாநில அரசு தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. ஆண்டுதோறும் ரூ.6500 கோடி கடனுக்காக ரூ.500 கோடி வட்டி செலுத்தும் நிலையில் உள்ளது. தனது பெரும்பாலான நிதித் தேவைகளுக்கு மத்திய அரசையே சார்ந்துள்ளது. மேலும், மாநில வரி வருவாய், பிணையப் பத்திரங்கள் விற்பனை மூலமாக கிடைக்கும் தொகை ஆகியவற்றைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது.
  அரசு சார்பு நிறுவனங்களில் சில மட்டுமே லாபத்தில் இயங்கி வருகின்றன. பாப்ஸ்கோ, பாசிக், ஏஎப்டி, பிஆர்டிசி உள்பட பெரும்பாலானவை நஷ்டத்தில்  இயங்கி கொண்டிருக்கின்றன. இவற்றின் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
  ஆனாலும் அரசு ஊழியர்கள் போனஸை எதிர்பார்த்தும், அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் தீபாவளியை முன்னிட்டாவது நிலுவை ஊதியமும்,  போனஸும் கிடைக்காதா என்ற எண்ணத்துடனும் அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து உள்ளனர். நிதி நெருக்கடி நிலவிய போதும் மாநில அரசு போனஸ் வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்படும்.
  இவர்களில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியமே பல மாதம் நிலுவை உள்ளது. தீபாவளியைக் கொண்டாட போனஸ் தொகையையே எதிர்பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai