Enable Javscript for better performance
பாஜகவினரை கண்டித்து மார்க்சிஸ்ட் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உருவபொம்மையை எரிக்க முயன்ற பாஜகவினரைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் கேரள மாநிலத்தில் தொடர்ந்து கொல்லப்படுவதற்கு அந்த மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே காரணம் எனக் கூறி பாஜக சார்பில் புதுவையில் கண்டன பேரணி, போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் திடீரென கேரள முதல்வர் பினராயி விஜயன் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்த முயன்றனர்.
    இதை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பாஜகவினர் போராட்டம் நடத்திய அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் முன்னிலை வகித்தார். பிரதேசக்குழு உறுப்பினர்கள் பிரபுராஜ், ஆந்து, மதிவாணன், சந்திரா, மணிபாலன், தமிழ்ச்செல்வன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தால் விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai