Enable Javscript for better performance
பார்வைத் திட்டம் கூட்டமைப்பு சார்பில் இன்று கண் தான விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பார்வைத் திட்டம் கூட்டமைப்பு சார்பில் இன்று கண் தான விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 11th October 2017 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பார்வைத் திட்டம் கூட்டமைப்பு, புதுவை சார்பில் கண் தான விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெறுகிறது.
    அக்டோபர் 12-ம் தேதி உலக விழி தேடுவோர் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 39 மில்லியன் பேர் கண்கள் பெறுவதற்காக காத்திருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கருவிழிப்படலம் தேடி காத்திருக்கின்றனர். எனவே, கண்
    தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமா
    கிறது. இதன் ஒரு பகுதியாக கண்தான விழிப்புணர்வுப் பேரணி அண்ணா திடலில் புறப்பட்டு, புஸ்ஸி வீதி, கடற்கரை சாலை வழியாக காந்தி திடலை அடைகிறது. புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன்குமார் தொடக்கி வைக்கிறார். பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ரெஜிஸ் ஜான் பிரிட்டோ தலைமை தாங்குகிறார்.
    பேரணி முடிவில் முதல்வர் நாராயணசாமி நிறைவுரை ஆற்றுகிறார். கண் தான விழிப்புணர்வு குறித்து டாக்டர் வனஜா வைத்தியநாதன் விளக்கவுரை ஆற்றுகிறார். ஓக்சானா நிறுவனர் டாக்டர் ஜோசப் சிறப்புரை ஆற்றுகிறார்.  பொதுமக்கள், இளைஞர்கள், உள்பட பலர் பேரணியில் கலந்து கொள்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai