சுடச்சுட

  

  புதுச்சேரி காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

  By DIN  |   Published on : 11th October 2017 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
  புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி, வட்டார, நிர்வாகிகள் உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது.
  புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
  முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி, ஷாஜஹான், கந்தசாமி, கமலக்கண்ணன், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏக்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
  பின்னர், மாநிலத் தலைவர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசின் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
  அவரது செயல்பாட்டை முதல்வர் உள்பட அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எதிர்த்து வருகிறோம். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தாலும் எதிர்ப்போம். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்குதுணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து இடையூறாக இருந்து வருகிறார் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai