சுடச்சுட

  

  புதுவையில் டெங்கு பாதிப்பால் மேலும் ஒரு சிறுவன் சாவு

  By DIN  |   Published on : 11th October 2017 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் செவ்வாய்க்கிழமை மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்தார்.
  புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. டெங்கு பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே 2 ஆயிரம் பேருக்கு மேல் டெங்கு பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த
  குருராஜன் (8) சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai