சுடச்சுட

    

    வேலையிடத்தில் மனநல ஆரோக்கியம்: ஜிப்மரில் விழிப்புணர்வு கலந்துரையாடல்

    By DIN  |   Published on : 11th October 2017 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜிப்மர் சுகாதாரக் கல்வி இயக்கம் சார்பில், "வேலையிடத்தில் மனநல ஆரோக்கியம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    குறிப்பாக, வேலையிடத்தில் ஏற்படும் பொதுவான மன நோய்கள், தனி மனித உறவுகளில் வரும் பாதிப்புகள் பற்றியும், அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. மனநல மருத்துவத் துறை தலைமை மருத்துவர் ரவி பிலிப் ராஜ்குமார், மனநல மருத்துவத் துறை முதுநிலை உறைவிட டாக்டர் கோபிநாத், மருத்துவ உளவியல் நிபுணர் மு. அறிவழகன்,  மனநல சமூகப்பணியாளர் மருத்துவத்துறை மு. கிரீஷ்மாஆகியோர் குழு கலந்துகொண்டு மன நோய் பற்றிய பொதுமக்களின் கேள்வி
    களுக்கு பதிலளித்தனர்.
    முதுநிலை உறைவிட மருத்துவர் டாக்டர் கார்த்திக் தொகுப்புரை ஆற்றினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai