சுடச்சுட

  

  புதுவை மத்திய சிறை துணைக் கண்காணிப்பாளர் உள்பட 4 பேர் பணியிடைநீக்கம்

  By  புதுச்சேரி  |   Published on : 12th October 2017 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பல்வேறு புகார்கள் எதிரொலியாக, புதுச்சேரி மத்திய சிறையின் துணைக் கண்காணிப்பாளர் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து ஐ.ஜி. (பொ) சக்திவேல் உத்தரவிட்டார்.
   புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் ஆண்கள், பெண்கள் சிறைப் பகுதிகள் உள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 2000-க்கும் மேற்பட்டோரை அடைக்க வசதி உள்ளது. ரெüடி மணிகண்டன், கருணா உள்படப் பலர் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
   இங்கு ஆண்கள் சிறையில் உள்ளவர்கள் பெண்கள் சிறைக்கும், பெண்கள் சிறையில் உள்ளவர்கள் ஆண்கள் சிறை வளாகத்துக்கும் செல்லத் தடை உள்ளது.
   இந்த நிலையில், வார்டர்கள் அனுமதியுடன் சிறையில் உள்ள ஆண் கைதிகள் பெண்களைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ரெüடி மணிகண்டன் மற்றும் முன்னாள் அமைச்சர் விஎம்சி. சிவக்குமார் கொலை வழக்கில் முக்கிய எதிரியான எழிலரசி ஆகியோர் சந்தித்துப் பேசியதாகப் புகார் வந்தது. ஏற்கெனவே இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், மீண்டும் வேறு ஏதாவது கொலை செய்யத் திட்டமிட்டனரா எனத் தெரியவில்லை. இதன் எதிரொலியாக, சிறைத் துறைக் கண்காணிப்பாளர் சக்திவேல் விசாரணை மேற்கொண்டார்.
   இதையடுத்து, மத்திய சிறை துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், முதன்மை வார்டர் வீரவாசு, வார்டர் கலாவதி , காவலர் பத்மநாபன் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
   ஆண்-பெண் கைதிகள் சந்தித்துப் பேச உதவியதாக இவர்கள் 4 பேர் மீது சிறைத் துறை சார்பில் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
   மேலும், கைதி தகவல்களை வெளியில் உள்ளவரிடம் தெரிவிப்பது, அங்கிருந்து தகவல் கொண்டு வருவது, செல்லிடப்பேசி போன்றவை வழங்கி உதவியது உள்பட பல குற்றங்களுக்காக இவர்கள் நால்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai