சுடச்சுட

  

  புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
   மணக்குள விநாயகர் கல்லூரியின் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   வாக்காளர் சேர்க்கை அதிகாரி கருணாகரன் வரவேற்றார். ஸ்வீப் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.கோவிந்தசாமி பங்கேற்று ஸ்வீப் அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள், வாக்காளர் அட்டையின் முக்தியத்துவம் குறித்து விவரித்தார்.
   தேர்தல் துறையின் வாக்காளர் பதிவு அதிகாரி ஷீலா, சுஷித்திரா ஆகியோர் முதல் முறை வாக்காளர் அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவரித்தனர்.
   தகுதியான 600 இளம் வாக்காளர்களுக்கு படிவம் 6 வழங்கப்பட்டு, நிறைவு செய்து பெறப்பட்டன. கல்லூரி முதல்வர் கே.வெங்கடாசலபதி சிறப்புரை ஆற்றினார். துணைப் பேராசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai