சுடச்சுட

  

  புதுச்சேரியை அடுத்த பெரியகாலாப்பட்டில் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியை வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜகான் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
   புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனம், தீபாவளி சிறப்பு அங்காடிகளை புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அமைத்து விற்பனையைத் தொடங்கியுள்ளது.
   அதன்படி, பெரிய காலாப்பட்டில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அமைக்கப்பட்ட பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு அங்காடியை வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் தொடக்கி வைத்தார்.
   பாப்ஸ்கோ மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஜோசப், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆடியபாதம், கிராம கமிட்டி தலைவர் சிவராமன், மூர்த்தி, சிங்காரம், லட்சுமணன், சுரேஷ்குமார், முருகன், மகளிர் அணியைச் சேர்ந்த வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai