சுடச்சுட

    

    வ.சுப்பையா நினைவு தினம்: முதல்வர், தலைவர்கள் அஞ்சலி

    By  புதுச்சேரி,  |   Published on : 13th October 2017 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நினைவு தினத்தையொட்டி, நெல்லித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதல்வர் வி.நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
     அவரைத் தொடர்ந்து, பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த சுப்பையாவின் உருவப் படத்துக்கும் மலர் தூவி அவர்கள் மரியாதை செலுத்தினர்.
     இதேபோல, வ.சுப்பையா உருவச் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.விசுவநாதன், தேசிய குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், துணைச் செயலர்கள் அ.ராமமூர்த்தி, அ.மு.சலீம், பொருளாளர் அபிஷேகம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கீதநாதன், முருகன், தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், சுப்பையா, சரளா மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள், தொகுதிச் செயலர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai