சுடச்சுட

  

  அமித் ஷா மகன் மீதான புகார்: சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 14th October 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜக  தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா மீதான ஊழல் புகார் தொடர்பாக சிபிஜ விசாரிக்க  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  அமித் ஷா, அவரது மகன்  ஜெய் ஷா ஆகியோர் ஊழல் புகாரில் சிக்கியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் ஜெய் ஷா நிறுவனத்தின் சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது. இதைக் கண்டித்தும், ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  அதன்படி, புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் தேவதாஸ், நீலகங்காதரன், விநாயகமூர்த்தி, மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai