Enable Javscript for better performance
அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு இன்று முதல் தீபாவளி பரிசுக் கூப்பன் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு இன்று முதல் தீபாவளி பரிசுக் கூப்பன் விநியோகம்

    By DIN  |   Published on : 14th October 2017 02:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் பதிவு செய்துள்ள 28,500 அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கான தீபாவளி பரிசுக் கூப்பன் சனிக்கிழமை (அக். 14) முதல் விநியோகிக்கப்படும் என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுக் கூப்பன் சனிக்கிழமை (அக். 14) முதல் வருகிற 24-ஆம் தேதி வரை (18, 19 மற்றும் 21, 22 ஆகிய நாள்கள் நீங்களாக) தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். மேற்கண்ட நாள்களில் பரிசுக் கூப்பன் பெறத் தவறியவர்கள் 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் பெற்றுக் கொள்ள
    லாம்.  தீபாவளி பரிசுக் கூப்பன் பெற வரும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, இறுதியாக செலுத்திய ஆண்டு சந்தா ரசீது, படிவம் - 1 ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வர வேண்டும். அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கியின் சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், உணவுப் பங்கீட்டு அட்டை நகல், எஸ்சி - எஸ்டியாக இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களை இணைத்து வழங்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai