சுடச்சுட

    

    முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
    டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது, விழிப்புணர்வுப் பேரணி ஆகியவை நடைபெற்றன.
    இதன் தொடர்ச்சியாக பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
    பள்ளியின் துணை முதல்வர் தனசெல்வன் நேரு தலைமை வகித்தார். விரிவுரையாளர் பூபதி டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், டெங்கு கொசுவைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மூத்த விரிவுரையாளர்கள் சுகுமார், பானுமதி, பாலசுப்ரமணியன், சிவராஜ், குமாரராசு, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai