சுடச்சுட

  

  நெல்லித்தோப்பு மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆற்றல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
  மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், அவர்களுடைய சிந்தனையைத் தூண்டும் வகையிலும் இந்த ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கர ராசு நோக்கவுரையாற்றி, ஓவியப் போட்டியைத் தொடக்கி வைத்தார். இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த ஓவியப் போட்டிக்கு ஆசிரியை சாந்தி ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டன.  
  ஓவியப் போட்டியில் மாணவர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆசிரியர்கள் மதனகோபால், கணபதி, விவேகாந்தன், கேசவர்த்தினி, கஸ்தூரி உள்பட பலர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai