Enable Javscript for better performance
ஆளுநர் மாளிகையே மக்களின் கடைசிப் புகலிடமாக உள்ளது: கிரண் பேடி- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநர் மாளிகையே மக்களின் கடைசிப் புகலிடமாக உள்ளது: கிரண் பேடி

    By DIN  |   Published on : 14th October 2017 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் ஆளுநர் மாளிகையே மக்களின் கடைசிப் புகலிடமாக உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
    புதுதில்லியில் ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
    ஆளுநர் மாளிகையே புதுவை மக்களின் கடைசி புகலிடமாக உள்ளதால், அது தற்போது மக்கள் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது. அவர்களின் நலனுக்காக குறைகேட்புக் கூட்டம், பார்வையாளர்கள் சந்திப்பு, சமூக கலாசார நிகழ்வுகள் அங்கு நடத்தப்படுகின்றன.
    இதைத்தான் பிரதமர் மோடியும் வலியுறுத்தியுள்ளார். அனைத்துத் தரப்பைக் காட்டிலும் ஆளுநர் மாளிகைதான் மக்களின் நம்பத் தகுந்த இடமாக உள்ளது.  நீதி, நிவாரணத்துக்காக வரும் மக்களின் நலனே முக்கியமாகும். மத்திய அரசுக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் இடையே இணைப்புப் பாலமாக ஆளுநர் மாளிகை திகழ்கிறது.
    குடியரசுத் தலைவரும் மாநாட்டில் பேசுகையில், எந்தத் தவறான தகவலையும் வெளிப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார். பொதுமக்கள் நலன்,  ஒடுக்கப்பட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். ஆளுநர் மாளிகையின் ஒவ்வோர் செயலும் மக்கள் நம்பும்படியாக இருக்க வேண்டும். ஆளுநர் மாளிகையின் மீதான நம்பிக்கை என்பது யூனியன் பிரதேசத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள அரசியல் சட்ட இணைப்பின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையாகும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதிவிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai