Enable Javscript for better performance
உருளையன்பேட்டை தொகுதி மின் தடை தொடர்பாக ஆய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உருளையன்பேட்டை தொகுதி மின் தடை தொடர்பாக ஆய்வுக் கூட்டம்

    By DIN  |   Published on : 14th October 2017 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உருளையன்பேட்டை தொகுதியில் நிலவும் மின் தடை பிரச்னை தொடர்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    சட்டப்பேரவை உறுப்பினர் இரா. சிவா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மின்துறை உதவிப் பொறியாளர்கள் முருகானந்தம், சுரேஷ், அச்சுதானந்தம், சுந்தரமூர்த்தி, கார்த்திகேயன் உள்பட இளநிலைப் பொறியாளர்கள் பங்கேற்றனர்.
    இந்தக் கூட்டத்தில் மின் தடைக்கான  பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் இருந்து தனியாக ஒரு மின் இணைப்பை கோவிந்தசாலைக்கு ஏற்படுத்த வேண்டும்.
    உப்பனாறு வாய்க்கால் மேல் செல்லும் உயர் மின் அழுத்த கேபிளை புதை வடமாக மாற்ற வேண்டும். உருளையன்பேட்டை தொகுதியில் இதுவரை எந்தெந்தப் பகுதிகளில் புதை மின்வட இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது?  அடுத்த ஆண்டுக்கான பணிகள், இடங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மேலும், குறைந்த மின் அழுத்தம் உள்ள பகுதிகள் புதிதாக திட்டத்தில் சேர்க்க வேண்டியது குறித்தும், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு தொகுதிகள் பயன்பெறும் வகையில் புதிதாக துணை மின் நிலையத்தை சுதேசி ஆலை வளாகத்தில் அமைக்க வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai