சுடச்சுட

  

  கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி தீபாவளி அன்று உண்ணாவிரதம்: புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர்கள் சங்கம் முடிவு

  By DIN  |   Published on : 14th October 2017 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 18-ஆம் தேதி, தீபாவளி அன்று அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

  இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் தலைவர் என்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: சங்கத்தின் சார்பில் அண்மையில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் சம்மேளனப் பொறுப்பாளர்கள் சி.எச்.பாலமோகனன், மு.சீத்தாராமன், எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
  கடந்த 12.5.2017 அன்று  ஊழியர்களின் குறைகளைத் தீர்க்க துறை அமைச்சர், செயலர், கூடுதல் செயலர் கலந்து கொண்ட குறை தீர்க்கும் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டபடி எந்தக் கோரிக்கைகளையும் அரசு இதுநாள் வரை நிறைவேற்றவில்லை. இதற்கு பொதுக் குழு சார்பில்  கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  நீண்ட நாள் கோரிக்கைகளைத் தீர்க்க முன் வராமல் குறை தீர்ப்பு என்ற பெயரில் சங்கத்தோடு பேசித் தீர்க்கும் நியாயமான வழிவகைக்குத் தடை ஏற்படுத்திய நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் வருகிற 18-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று பணிக்கு எவ்வித பாதகம் இல்லாமல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரே உண்ணாவிரதம் நடைபெறும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai