சுடச்சுட

  

  பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  By DIN  |   Published on : 14th October 2017 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஸ்வீப் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம்களை நடத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
  அதன்படி, முதல் முறை வாக்காளர்களைப் பட்டியலில் சேர்க்கவும், வாக்களிப்பதில் அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் ஓய்விசி அமைப்பின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாரதிதாசன் அரசுக் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
  கல்லூரி முதல்வர் பூங்காவனம் தலைமை வகித்தார். வாக்காளர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் மரிஜோஸ்பின் அருணா நோக்கவுரை ஆற்றினார்.
  மாநில என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர்கள் இ.தேவபாலன், பி.குழந்தைசாமி ஆகியோர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விவரித்தனர்.
  மேலும், இதன் ஒரு பகுதியாக ரங்கோலி, ஓவியம் வரைதல், போஸ்டர் மேக்கிங், நாடகம், மெஹந்தி, நைல் ஆர்ட், பேஸ் பெயிண்டிங், பேச்சுப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.
  அரசியலில் இளைஞர்கள் பங்களிப்பு, தேசக் கட்டமைப்புக்கு நன்மையா, தீமையா, சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், இதர பாலினத்தவர் பங்கேற்பு, தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு உள்ளிட்ட தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெற்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai