Enable Javscript for better performance
புற்று நோய் பாதிப்பு: காவலர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    புற்று நோயின் பாதிப்பு தாளாமல் காவலர் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி சண்முகாபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சீனுவாசன் (53). இவர், வில்லியனூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார்.
    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சீனுவாசன் புற்று நோயினால் அவதிப்பட்டு வந்தாராம்.
    இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோயின் தாக்கம் அதிகமானதால் மனமுடைந்த காவலர் சீனுவாசன் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, மின் வயரினால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.
    இதுகுறித்து கோரிமேடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai