சுடச்சுட

    

    புதுச்சேரியில் பெண்ணைக் கொன்று நகையைத் திருடிய வழக்கில், இளைஞருக்கு புதுச்சேரி இரண்டாவது மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
    செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்தவர் கலில் ரஹ்மான் (35)  . இவர், கடந்த 27.6.2008 அன்று புதுச்சேரி வந்தார். அவருடன் தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்த பத்மநாபனின் மனைவி செல்வியும் (28) வந்தார்.
    தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த இருவரும் மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில், மறுநாள் காலை செல்வி அறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    விசாரணையில், செல்வியைக் கொன்றிவிட்டு, 7 பவுன் தங்க நகைகளுடன் கலில் ரஹ்மான் தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி கலில் ரஹ்மானை கைது செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) செல்வநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலில் ரஹ்மானுக்கு ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளித்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai